மஹிந்தவுடன் சிறுபான்மை கட்சி தலைவர்கள்; வைரலாகும் புகைப்படங்கள்!

0

மாகாண சபைத் தேர்தலை, பழைய முறைமையில் நடத்துவதற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான கூட்டம் ஒன்று கடந்த வியாழக்கிழமை(09) நாடாளுமன்ற கட்டட வளாகத்தினுள் இடம்பெற்றிருந்தது. இதில் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களான, அமைச்சர் ரவுப் ஹக்கீம், மனோ கணேசன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஒன்றிணைந்த எதிரணியினர் சார்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான, மஹிந்த யாப்பா அபேவர்தன, உதய கம்மன்பில, டலஸ் அழகப்பெரும ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருப்பதையும் படங்களில் காணமுடிகின்றது. இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.