முல்லைத்தீவில் இரண்டு தலைகளுடன் பிறந்த அதிசய பசுக்கன்று ! புகைப்படம் உள்ளே

0

முல்லைத்தீவில் பசு மாடு ஒன்று அதிசய பசுக்கன்று ஒன்றை ஈன்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

முல்லைத்தீவின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் இரண்டு தலைகளுடனான பசுக்கன்று ஒன்றை அந்த மாடு ஈன்றுள்ளது.
குறித்த பிரதேச மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ள இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டிலேயே நடந்துள்ளது.

எவ்வாறாயினும் அந்த அதிசயப் பசுக் கன்றும் அதனை ஈன்ற தாய்ப் பசுவும் தற்பொழுதுவரை நலமாக இருப்பதாக குறித்த மாட்டின் உரிமையாளர் எமக்குத் தெரிவித்தார்.
அபூர்வமாக நிகழ்ந்த இந்தச் சம்பவத்தைக் கேள்வியுற்ற மக்கள் குறித்த விவசாயியின் வீட்டை நோக்கிப் படையெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave A Reply

Your email address will not be published.