முல்லைத்தீவு நீதிமன்றத்தில் கொலைக்குற்றவாளி உள்ளிட்ட நான்கு கைதிகள் தப்பி ஓட்டம்!

0

முல்லைத்தீவு நீதிமன்ற சிறைச்சாலை கட்டத்தில் இருந்து நான்கு கைதிகள் இன்று 07.08.18 தப்பிஓடியுள்ளதாக முல்லைத்தீவு பொலீஸார் தெரிவித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் கடந்த 23.05.18 இளைஞன் கொலையினை மேற்கொண்ட சுண்ணாகத்தினை சேர்ந்த கொலைக்குற்றவாளி கடந்த 31.05.18 அன்று முல்லைத்தீவு பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

மற்றும் கடந்த 27.06.18 அன்று முல்லைத்தீவு நகர் கள்ளப்பாட்டுஉள்ளிட்ட பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச்சபம்பவங்களுடன் தொடர்புடைய ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். அதில் மூன்று குற்றவாளிகளும் இன்று விசாரணைக்காக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் கொண்டுவரப்பட்டுள்ளார்கள் .

இவர்கள் விசாரணைக்காக நீதிமன்ற சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்ட வேளை நீதிமன்ற சிறைச்சாலை பொலீஸாருக்கு தெரியாத நிலையில் தப்பி ஒடியுள்ளார்கள்.இவர்களை தேடும் பணியில் முல்லைத்தீவு பொலீஸார் ஈடுபட்டுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.