யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் அமைந்திருந்த சிங்கள மகா வித்தியாலயத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படு கின்றன என்று தெரியவருகின்றது.
இது தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் 26ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் பழைய பூங்காவில், சிங்கள மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெறவுள்ளது.
53 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள மகா வித்தியாலயம் யாழ்ப்பாணம் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. சிங்கள மகா வித்தியாலயம் இருந்த இடத்தில் இராணுவத்தினரின் முகாம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. 1985ஆம் ஆண்டு போர் காரணமாக சிங்கள மகாவித்தியாலயம் மூடப்பட்டது.