யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் வாள்வெட்டு குழுவினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

0

யாழ். கொக்குவில் பகுதியில் வைத்தியர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதலில் ஈடுபட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலை முன்பாக இன்று காலை முன்னெடுக்கப்பட்ட கண்டன போராட்டம் சுமார் அரை மணிநேரம் வரை நீடித்தது.

இதன்போது, தாக்குதலாளிகளை பொலிஸார் விரைந்து கைது செய்யவேண்டுமென கோரிக்கை விடுத்த வைத்தியர்கள், கைது செய்யப்படாவிடின் தாம் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ‘மக்கள் சேவை பரிசு வாள்’, ‘பொது மக்களின் சாதாரண வாழ்க்கைக்கான இடையூரை இல்லாமல் செய்’, ‘யாழ்.மண்ணில் சட்ட ஒழுங்கு யார் கையில்’, போன்ற சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.