ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை – பிரியா பவானி சங்கர்

0

மேயாதமான், கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த பிரியா பவானி சங்கர், ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியிருக்கிறார். #PriyaBhavaniShankar

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களான ரஜினி, கமல் இருவரும் அரசியல் பயணத்தை துவங்கி விட்டனர். இருவரின் அரசியல் பயணம் குறித்து பேசி இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர். மேயாத மான் படத்தில் அறிமுகமான இவர் சமீபத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து இருந்தார்.

‘நாம் எப்போதுமே நடிகர்களிடமிருந்து சில வி‌ஷயங்களை எதிர்பார்க்கிறோம். அவர்கள் திரையில் பேசும் வசனங்களை அவர்களுடைய நிஜ வாழ்க்கையோடு ஒப்பிடுகிறோம். எல்லோருக்குமே அரசியலில் தொடர்பு இருக்கிறது. நம்முடைய முகநூல் பக்கத்தைப் பார்த்தாலே நாம் பேசுவதுதான் அரசியல் எனப் புரிந்துவிடும். ரஜினி, கமல் இருவரையுமே எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அவர்கள் அரசியலில் குதித்திருக்கிறார்கள். அவர்கள் மிகப்பெரிய நடிகர்கள் என்பதால் நம்ப வேண்டும் என்ற அவசியமில்லை. அரசியல் ஒன்றும் இரண்டரை மணி நேரப் படம் கிடையாது, அவர்கள் தேர்தலில் ஜெயித்து வெற்றிபெற்று ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்யப்போகிறார்கள். இந்த வி‌ஷயத்தில் நான் ஒரு சாதாரண குடிமகளாக முடிவெடுப்பேன். நான் அவர்களுடைய படம் ரிலீஸ் ஆனால் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன். அதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை’ என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.