வலிகாமம் கிழக்கில் மூடப்பட்டிருந்த வீதி தவிசாளர் நிரோஷின் முயற்சியினால் திறந்து வைப்பு !

0

வலிகாமம் கிழக்கில் உள்ள உரும்பிராயில் பூட்டப்பட்டிருந்த வீதி வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் , உறுப்பினர் கௌரவ அகிபன் பிரசன்னத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்டது .

உரும்பிராய் வடக்கில் உள்ள ஞானவைரவர் கோவிலை ஊடறுத்துச் செல்லும் வீதி மீளவும் மக்கள் போக்குவரத்திற்கு வசதி செய்யப்பட்டுள்ளதுடன் அவ் வீதி விஸ்தரிக்கவும் பட்டுள்ளது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் வட்டார உறுப்பினர், சிவில் சமூக பிரதிநிதிகள் மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக நீண்டகாலமாக இரு தரப்புக்களிடையே நிலவிவந்த முரண்பாடுகள் சுமூகமாகத் தீர்க்கப்ட்டு புரிந்துணர்வின் அடிப்படையிலேயே இவ் வீதி திறக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் தவிசாளராக தியாகராஜா நிரோஷ் பதவியேற்றதன் பின்னர் வலி கிழக்கில் உள்ள பிரதேசங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் .துடிதுடிப்பான இளைஞர் நிரோஷ் பிரதேச அபிவிருத்தி தொடர்பில் பல ஆக்கபூர்வமான நடவடிக்கலைகளை மேற்கொண்டுள்ளார் .பல வருடங்களாக தீர்க்கப்படாமல் இருந்த பல பிரச்சனைகளை தவிசாளர் நிரோஷ் குறுகிய காலத்தில் தீர்த்து வைத்துள்ளதாக பிரதேச மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.