வாள்ப்பாணம் ஆகிறதா யாழ்ப்பாணம்?

0

யாழ்ப்பாணத்தின் மறுபெயரே இன்று வாள்ப்பாணம் ஆகிவிட்டது. ஈழத் தமிழர்களின் பண்பாட்டுத் தலை நகரமாக உலகளவில் பிரசித்தமாக இருந்தது யாழ்ப்பாணம். ஈழத் தமிழ்ரகளின் அறிவுப் பொக்கிசமாகவும் கல்வியில் தலைசிறந்த நகராமாகவும் யாழ்ப்பாணம் பெயர் பெற்றிருந்தது யாவரும் அறிந்தது.

அத்துடன் தமிழர்களின் விடுதலைக்காக துப்பாக்கிகளையும் புத்தகங்களையும் ஏந்திய இளைஞர்களை தந்தது யாழ்ப்பாணம். சக மனிதர்களின் உரிமைக்காக, தம் சனத்திற்காக அவர்களின் உரிமைக்காக அந்த இளைஞர்கள் தமது உயிரையும் துச்சமாக கருதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுவே தமிழீழ விடுதலைப் போராட்டம். உலகத்தின் கவனத்தை ஈர்த்த போராட்டம்.

ஆனால் இன்று யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வாள்களுடன் திரிகின்றனர். சக மனிதர்களின் உயிரை எடுக்கும் விதமாகவும் சக மனிதர்களை சொத்துக்களை சூறையாடும் விதமாகவும் அமைதியை குலைக்கும் விதமாகவும் வன்முறைகளைப் புரிய வாள்களுடன் திரியும் இந்த இளைஞர்கள் எப்படி உருவானார்கள் என்பதை அதிகம் ஆராய வேண்டியுள்ளது.

தமிழர்களை வன்முறையாளர்களாக சித்திரிக்க வேண்டிய தேவை யாருக்கு இருக்கிறது? தமிழர்களை தொடர்ந்தும் ஆயுத முனைக்குள் வைத்திருக்க வேண்டிய தேவை யாருக்கு இருக்கிறது? சிங்கள அரசுக்கே அந்த தேவை இருக்கிறது. சிங்கள இராணுவத்திற்கே அந்தத் தேவை இருக்கிறது. யாழ்ப்பாண வாள்களின் பின்னால் சிங்கள இராணுவமே இருக்கிறது.

மாபெரும் இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளை, அவர்களின் புலனாய்வு கட்டுமைப்புக்களை துரோகம் மூலமும் உலக வல்லதிக்கங்களை கொண்டும் ஒடுக்கி அழித்த சிங்கள அரசுக்கு ஏன் இந்த வாள்வெட்டுக் குழுவை அடக்க முடியவில்லை. நிச்சமாக ஆவாக் குழு என்பது ஆமிக் குழுவே. அதன் காரணமாக சிங்கள இராணுவத்தின் சூழ்ச்சியில் தமிழ் இளைஞர்கள் பலியாக்கி வன்முறைக் குழுவாக்கப்பட்டுள்ளனர்.

இப்போது சிங்கள அரசு எமக்கு அட்வைஸ் பண்ணுகிறது. ஒழுக்கத்தை அறத்தை, அமைதியைப் பற்றி அறிவுரை சொல்கிறது. நாங்கள் எப்படி இருந்தோம்? எப்படி வாழ்ந்தோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் எங்கள் ஈழம் எவ்வளவு ஒழுக்கமாகவும் அமைதியாகவும் இருந்தது. மக்கள் எவ்வளவு நிம்மதியாக வாழ்ந்தனர்?

இன்று? இந்த நிலையை மாற்ற வேண்டும். இதற்கு ஈழ விடுதலைப் புலிகளின் சிந்தனையை நாம் பின்பற்றுவது அவசியமானது. அவர்கள் கற்றுத் தந்த ஒழுக்கத்தை, சமூக சிந்தனையை எமக்குள் ஏற்படுத்த வேண்டும். உண்மையில் இவைகளை கட்டுப்படுத்த மீண்டும் விடுதலைப் புலிகள் வர வேண்டும் என்ற நிலைக்கு தமிழீழம் தள்ளப்பட்டிருக்கிறது.

ஆசிரியர்,
ஈழம்நியூஸ்.
13.08.2018.

Leave A Reply

Your email address will not be published.