வாள்வெட்டு குழுவை சேர்ந்தவர் சரணடைவு!

0

யாழ்ப்பாணம் நீர்­வேலி வாள்­வெட்டுச் சம்­ப­வத்தில் தொடர்புபட்டவர் என்ற குற்­றச்­சாட்­டில் தேடப்­பட்டு வந்­த­வ­ரைக் கைது செய்­துள்­ளதாக பொலி­ஸார் அறிவித்துள்ளனர். குறித்த சந்தேக நபரை விளக்கமறியில் வைக்க நீதி­மன்று உத்­த­ர­விட்­டது.

யாழ்ப்பாணம் நீர்­வேலி செம்­பாட்டு பிள்­ளை­யார் ஆலயத்திற்குள் கடந்த மே மாதம் இடம்பெற்ற வாள்­வெட்டு சம்பவத்தில் அப் பகுதியை சேர்ந்த இரு­வர் காய­ம­டைந்­தி­ருந்­த­னர். இந்த சம்பத்துடன் தொடர்புடையவர்களாக கூறப்பட்டு இணு­வில் தாவடி போன்ற பகுதிகளை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்­கள் தொடர்ந்­தும் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இச் சம்பத்துடன் தொடர்புடைய ஏனையோரை பொலிஸார் தேடி வரும் நிலையில் சந்­தே­க­ந­பர் சட்­டத்­த­ரணி ஒரு­வர் மூல­மாக யாழ்ப்­பாண நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். எனி­னும் அவ­ரைப் பொலிஸ் நிலை­யத்­தில் சர­ண­டை­யு­மாறு நீதி­வான் தெரி­வித்­த­தை­ய­டுத்து நேற்று முன்­தி­னம் அவர் பொலிஸ் நிலை­யத்­தில் சட்­டத்­த­ரணி ஊடாக சரணடைந்தார். அத்துடன் குறித்த நபர் நேற்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

குறித்த சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்­டத்­த­ரணி பிர­தீ­பன், சந்­தே­க­ந­ப­ருக்­கும் வாள்­வெட்­டுச் சம்­ப­வத்­துக்­கும் தொடர்­பில்லை என்றும் நண்பர் ஒருவரை சந்திக்கவே அவ் இடத்திற்குச் சென்றதாகவும் கூறினார். வழக்கை ஆராய்ந்த யாழ்ப்­பாண நீதி­மன்ற மாவட்ட நீதி­ப­தி­யும் மேல­திக நீதி­வா­னு­மா­கிய வி.இரா­மக்­க­ம­லன், சந்­தேக நபரை இன்­று­வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்­டார்.

Leave A Reply

Your email address will not be published.