தற்போது அனைவரின் வாயிலும் கடலையாகி இருக்கும் விடயம் அபிராமி தான். பெற்ற குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொலை செய்தது மட்டுமின்றி கணவரையும் கொலை செய்ய முயற்சித்து தோற்றுப் போனவர். இறை அருளால் கணவன் மட்டும் தப்பித்து விட தற்போது அபிராமி கம்பி எண்ணுகிறார். இவருக்கு பிரியாணி கடையில் வேலை செய்பவர் மீது ஏற்பட்ட காதலே இத்தனைக்கும் காரணம். தற்போது பலரும் அபிராமி மற்றும் சுந்தரம் அவருடன் அபிராமியின் கணவர் விஜய் பற்றி மட்டுமே பேசி வருகின்றனர். இந்த கொடூரத்தால் பாதிக்கப் பட்ட இன்னொரு ஜீவனும் உள்ளது அது தான் சுந்தரத்தின் மனைவி.
மூன்று ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து கடந்து மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தவர்கள் தான் சுந்தரம் மற்றும் மனைவி. அவர் கூறியிருப்பதாவது திருமணம் ஆகி மூன்று வருடங்களாகியும் குழந்தை இல்லை. இருவரும் வைத்தியரை பார்த்து வந்தோம்.
இரண்டு வருடங்களுக்கு முன் தான் சென்னை குன்றத்தூர் பகுதிக்கு வந்தோம். கடந்த 2 மாதங்களாக அபிராமி எங்கள் வீட்டுக்கு வருவார் கணவரிடம் யார் என்று கேட்டபோது எம் குடும்ப நண்பர் என்றார். என் கணவர் மீது அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்த நான் இதை நம்பினேன்.
இதனால் அபிராமி வருவதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அன்று என் பெற்றோரை தூக்கி வீசிவிட்டு கணவரே உலகம் என்று வந்தேன் இன்று யாரோ ஒரு பெண்ணுக்காக பச்சை குழந்தைகளை கொல்ல உதவி செய்துள்ளார். என் வாழ்க்கை இனி முடிந்துவிட்டது என அழுது தீர்க்கும் சுந்தரத்தின் மனைவிக்கு அயலவர் ஆறுதல் கூறி வருகின்றனர்.
காதலுக்காக தாய் தந்தையை விட்டு வந்த பெண்ணை ஒரு நிமிடம் சிந்தித்து இருக்கலாம் இந்த சுந்தரம். இரண்டு உயிர்கள் பறிக்கப்பட்டும் இரண்டு உயிர்கள் துடித்துக்கொண்டும் இருக்க காரணமான சுந்தரம் மற்றும் அபிராமிக்கு தண்டனை கடினமானதாக இருக்க வேண்டும்.