அலவாங்கால் ஆசிரியரை தாக்க வந்த ஈபிடிபி தமிழ்செல்வன்! கிளிநொச்சியில் பரபரப்பு!! தோட்டக்காட்டான் எனப் பேச்சு! வீடியோ இணைப்பு!!!
கிளிநொச்சி தொண்டமான் நகர் பகுதியில் வசிக்கும் ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த ஈபிடிபி சந்திரகுமார் அணியை சேர்ந்த தமிழ்செல்வன் உள்ளிட்ட ரவுடிகள் அவரின் வயோதிப தாயை தாக்கியுள்ளதுடன் அங்கிருந்த பெண் பிள்ளைகளையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.
குறித்த சம்பவம் கடந்தவாரம் இடம்பெற்றுள்ளது.
தொண்டமான் நகர் பகுதியில் வசித்து வரும் குறித்த ஆசிரியரின் வீட்டுக்கு அருகில் அவரது அயல் வீட்டுக்காரர் கழிவுகளை கொட்டியதால் இது தொடர்பில் ஆசிரியர் அயல்வீட்டுக்காரரிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால், கூரிய ஆயுதத்தினைக்கொண்டு அயல்வீட்டுக்காரர், ஆசிரியரைத் தாக்க முற்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, குறித்த ஆசிரியரின் வீட்டிற்கு அயல்வீட்டுக்காரரின் உறவினர்கள் சென்றபோது, ஆசிரியர் இருக்கவில்லை, இதனையடுத்து அவரது தாயாரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன் அவரைத் தாக்கியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
தினேஸ், சந்திரகுமாரின் அடியாள்.
ஈபிடிபி சந்திரகுமார் அணியை சேர்ந்த, தமிழ்செல்வன், தினேஸ், சதிஷ் உள்ளிட்ட ஆறுபேர் கொலை அச்சுறுத்தல் விடுத்ததுடன், விரைவில் கடத்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்ற வேளை, பொலிஸார் முறைப்பாட்டை ஏற்காது திருப்பி அனுப்பியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.