ஆசியக்கிண்ணம் 1 வது போட்டியில் பங்களாதேஷிடம் மண்டியிட்ட இலங்கை ! 137 ஓட்டங்களால் படுதோல்வி

0

14 வது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் டுபாயில் நேற்று ஆரம்பமாகியது .முதலாவது போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .

பகலிரவு போட்டியாக இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது .

தனது முதலாவது ஓவரிலேயே லசித் மலிங்க இரண்டு .விக்கட்டுக்களை கைப்பற்றி அசத்தினார் .அதிரடியாக துடுப்பெடுத்தாடிய முஸ்திக்கார் ரஹீம் 150 பந்துகளை எதிர்கொண்டு 4 ஆறு ஓட்டங்கள் 11 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 144 ஓட்டங்களை குவித்தார் ,முகமட் மிதுன் 2 ஆறு ஓட்டங்கள் 5 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 68 பந்துகளில் 63 ஓட்டங்களை பெற்றார் .

49 .3 ஓவர்களில் பங்களாதேஷ் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 261 ஓட்டங்களை குவித்துள்ளது .பந்து வீச்சியில் இலங்கை அணி சார்பாக லசித் மலிங்க பத்து ஓவர்கள் பந்துவீசி 2 ஓட்டமற்ற ஓவர்கள் உள்ளடங்கலாக 23 ஓட்டங்களை கொடுத்து நான்கு விக்கட்டுகளை கைப்பற்றினார் .டீ சில்வா இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினார் .

ஆட்ட நேர இடைவேளையின் பின்னர் 262 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி துடுப்பெடுத்து ஆடியது .அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உப்புல் தரங்க ஆரம்பத்தில் அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர் .16 பந்துகளை எதிர்கொண்ட உப்புல் தரங்க 1 ஆறு ஓட்டம் , 4 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 27 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார் .

பங்களாதேஸ் அணியின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் திணறினார்கள் ,அடுத்தடுத்து விக்கட்டுக்கள் சரிக்கப்பட்டன .இறுதியில் 35 .2 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கட்டுகளையும் பறிகொடுத்து வெறும் 124 ஓட்டங்களை மாத்திரமே பெற்று படுதோல்வி அடைந்தது .

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணியின் சார்பில் மோர்தசா , ரஹ்மான், ஹசன் மிராஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தினார் . பங்களாதேஷ் அணி 137 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது .அதிரடியாக ஆடி 144 ஓட்டங்களை குவித்த முஸ்தீகர் ரஹீம் ஆட்ட நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார் .

Leave A Reply

Your email address will not be published.