ஆசிய கிண்ணம் முதலாவது போட்டி ! முஸ்திக்கார் ரஹீம் அதிரடி ! பங்களாதேஷ் 261 ஓட்டங்கள் குவிப்பு

0

 

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் டுபாயில் இன்று ஆரம்பமாகியுள்ளது .முதலாவது போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டு இருக்கின்றன .

பகலிரவு போட்டியாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது .

தனது முதலாவது ஓவரிலேயே லசித் மலிங்க இரண்டு .விக்கட்டுக்களை கைப்பற்றி அசத்தினார் .அதிரடியாக துடுப்பெடுத்தாடிய முஸ்திக்கார் ரஹீம் 150 பந்துகளை எதிர்கொண்டு 4 ஆறு ஓட்டங்கள் 11 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 144 ஓட்டங்களை குவித்தார் ,முகமட் மிதுன் 2 ஆறு ஓட்டங்கள் 5 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 68 பந்துகளில் 63 ஓட்டங்களை பெற்றார் .

49 .3 ஓவர்களில் பங்களாதேஷ் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 261 ஓட்டங்களை குவித்துள்ளது .பந்து வீச்சியில் இலங்கை அணி சார்பாக லசித் மலிங்க பத்து ஓவர்கள் பந்துவீசி 2 ஓட்டமற்ற ஓவர்கள் உள்ளடங்கலாக 23 ஓட்டங்களை கொடுத்து நான்கு விக்கட்டுகளை கைப்பற்றினார் .டீ சில்வா இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினார் .

ஆட்ட நேர இடைவேளையின் பின்னர் இலங்கை அணி 262 என்ற இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட உள்ளது .இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

Leave A Reply

Your email address will not be published.