ஆபாச ரீதியில் பகிடி(வதை) செய்தமையினால் மனமுடைந்த பல்கலைக்கழக மாணவி தற்கொலை ! இடையிலேயே புதைக்கப்பட்ட இலட்சியம்

0

சப்ரகமுவ பல்கலைகழக மாணவி ஒருவர் ஆபாச பகிடிவதையால் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்பு தேவி பாலிகா வித்தியாலயத்தில் கல்விகற்று தற்போது சப்ரகமுவ பல்கலைகழகத்தில் கல்விகற்கச் சென்ற மாணவியான அமாலி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆபாச ரீதியான பகிடிவதை காரணமாகவே இந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவரை பகிடிவதைக்கு உட்படுத்திய மாணவிகள் ஆபாசப்படத்தை போல் செய்து காட்டச்சொன்னதன் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்கொலைக்கு முன்னதாக அமாலி எழுதிய கடிதத்தில்- தனது உடலை கனத்தை மயானத்தில் அடக்கம் செய்யும்படி கேட்டுள்ளார். தனது பாடப்புத்தகங்களையும் தன்னுடன் சேர்த்து அடக்கம் செய்யும்படியும், கணினி, கையடக்க தொலைபேசி, ரப் என்பவற்றை தரிந்து என்ற மாணவியிடம் வழங்கும்படியும் கோரியுள்ளார்.

அத்துடன் தனது வங்கியிலுள்ள பணத்தின் மூலம் தனது இறுதிக்கிரியை மிக எளிமையாக நடத்தி முடிக்கும்படியும், தனது இறுதிக்கிரியையில் சப்ரகமுவ பல்கலைகழக மாணவர்கள் யாரையும் அனுமதிக்கும்படியும் கேட்டுள்ளார். அத்துடன் தனது பெயரில் உள்ள சொத்துக்களை மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு வழங்கும்படியும் கேட்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட மாணவியும், மாஷாவும் கொழும்பு தேவி பாலிகா வித்தியாலயத்தை சேர்ந்தவர்கள். பாடசாலை காலத்திலும் மாஷாவால் அவர் சீண்டப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.