இதை என்றுமே மறக்க மாட்டேன் – கீர்த்தி சுரேஷ் சிரிப்புக்கு ஸ்ரீரெட்டி கண்டனம்

0

சண்டக்கோழி-2 பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஷால் பதிலுக்கு கீர்த்தி சுரேஷ் சிரித்தது கேவலமாக இருப்பதாக, தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். #Sandakozhi2 #KeerthiSuresh #SriReddy

சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தன்னையும் படுக்கையில் பயன்படுத்தி விட்டு நடிக்க வாய்ப்பு தராமல் ஏமாற்றி விட்டதாக கூறினார்.

பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர் பட்டியலையும் வெளியிட்டார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் அந்த பட்டியலில் இருந்தனர். இது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்கள் சங்கத்தினர் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக திரண்டனர். தேசிய மகளிர் ஆணையமும் இந்த பிரச்சினையில் தலையிட்டது. ஐதராபாத்தில் பாதுகாப்பு இல்லை என்று ஸ்ரீரெட்டி தற்போது சென்னையில் குடியேறி இருக்கிறார். அவரது வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் படமாக தயாராகிறது.

இந்த படத்தை தடை செய்யும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்று நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷாலுக்கு அவர் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதுகுறித்து சண்டக்கோழி-2 பட விழாவில் விஷாலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது,

‘‘ஸ்ரீரெட்டிக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை வரவேற்கிறேன். இந்த படத்தில் நடிக்கும்போது எல்லோரும் உஷாராக இருப்பார்கள். அவர் தனது பாதுகாப்புக்கு எல்லா இடத்திலும் கேமரா வைத்து இருப்பார்’’ என்றார். ஸ்ரீரெட்டி பற்றி விஷால் பேசியதை கேட்டு அருகில் இருந்த கீர்த்தி சுரேஷ் சிரித்ததாக கூறப்படுகிறது. இந்த சிரிப்பு ஸ்ரீரெட்டியை கோபப்படுத்தி உள்ளது.

கீர்த்தி சுரேசை தனது முகநூல் பக்கத்தில் ஸ்ரீரெட்டி கண்டித்துள்ளார். ‘‘கீர்த்தி சுரேஷ் சிரிப்பு மிகவும் கேவலமாக இருந்தது. கவலைப்படாதீர்கள் மேடம். நீங்கள் எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்க முடியாது. ஒரு நாள் போராடுபவர்கள் வலியை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் சிரித்ததை நான் மறக்க மாட்டேன். நினைவு வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள்’’ என்று ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். #Sandakozhi2 #KeerthiSuresh #SriReddy

Leave A Reply

Your email address will not be published.