இந்திய அணிக்கு மீண்டும் தலைவரான டோனி ! குதூகலத்தில் ரசிகர்கள்

0

இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததுள்ளது. டோனி கேப்டனாக பணியாற்றுகிறார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் இன்று மாலை 5 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது . இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், டோனி கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். அத்துடன் தீபக் சாஹர் அறிமுகமாகியுள்ளார்.

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. லோகேஷ் ராகுல், 2. அம்பதி ராயுடு, 3. மணிஷ் பாண்டே, 4. டோனி, 5. தினேஷ் கார்த்திக், 6. கேதர் ஜாதவ், 7. ஜடேஜா, 8. தீபக் சாஹர், 9. சித்தார்த் கவுல், 10. குல்தீப் யாதவ், 11. கலீல் அகமது.

Leave A Reply

Your email address will not be published.