இரட்டைச் சதம் அடித்த டோனி ! வரலாற்று சாதனை ! முதலிடத்தில் பொண்டிங்

0

இந்திய ஒருநாள் அணிக்காக 200 போட்டிகளில் கேப்டனாக பணியாற்றிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை டோனி படைத்துள்ளார். ஆசிய கோப்பை ‘சூப்பர் 4’ சுற்றில் இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது.

நேற்று இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தற்காலிக தலைவர் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டது .அதன் காரணமாக இந்திய அணியின் தலைவராக தல மகேந்திர சிங் டோனி நியமிக்கப்பட்டார் .

டோனி ஒருநாள் கிரிக்கெட்டில் அணியின் தலைவராக தலைமை வகித்த 200-வது போட்டி நேற்றைய போட்டியாகும் . இதன்மூலம் 200 போட்டிகளில் கேப்டனாக இருந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

டோனி கடைசியாக 2016-ம் ஆண்டு அக்டோபர் 29-ந்தேதி நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கேப்டனாக பணியாற்றினார். அதன்பின் தற்போது 696 நாட்கள் கழித்து நேற்றைய தினம் அணியின் தலைவராக செயற்பட்டார் ,

எம்எஸ் டோனி தலைமையில் இந்தியா 200 போட்டிகளில் விளையாடி 110-ல் வெற்றியை ருசித்துள்ளது. 74 போட்டியில் தோல்வியும் சந்தித்துள்ளது. 5 போட்டிகள் ‘டை’யில் முடிந்துள்ளன. 11 போட்டிகள் எந்தவித முடிவையும் சந்திக்கவில்லை.

அதிக ஒருநாள் போட்டிகளுக்கு தலைமை வகித்த அணி தலைவர்கள் வரிசையில் டோனி சர்வதேச ரீதியில் மூன்றாம் இடத்தில உள்ளார் .முதலாம் இடத்தில் அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் உள்ளார் .பொண்டிங் 230 சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கு தலைமை வகித்துள்ளார் . இரண்டாம் இடத்தில் நியூசிலாந்தின் பிளெமிங் உள்ளார் ,இவர் 218 சர்வதேச போட்டிகளில் தலைவராக செயற்பட்டுள்ளார் .

Leave A Reply

Your email address will not be published.