இறைச்சிக்கு விற்பனை செய்வதற்காக காளை மாட்டை வீதியில் காட்சிப்படுத்தியவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை !

0

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் காளை மாடு ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காட்சிப்படுத்தப்பட்டதுடன். அதனை பின்னர் இறைச்சிக்காக வெட்ட திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் யாழில் மாடொன்றை காட்சிப்படுத்தி அதனை இறைச்சிக்காக வெட்டுப்படவுள்ளமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை முவைத்திருந்த நிலையில் குறித்த மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திலையில், குறித்த காளை மாட்டை யாழ் மாநகர சபை அனுமதியின்றி காட்சிப்படுத்தியமை, ரிக்கட் பதிந்தமை, உரிய சுகாதார முறையின்றி அறிக்கை வெளியிட்டமை மற்றும் காளையின் காலில் காயம் இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் காளையை இறைச்சியாக்கவிருந்தவர் மீது இன்று பொலிஸார் ஊடாக மாநகர சபை மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும், அது தொடர்பில் எழுந்த விமர்சனங்களின் குறித்த காளையின் உரிமையாளரான இறைச்சி விற்பனையாளர் குறித்த மாட்டை ஆலயம் அல்லது பொது தேவைக்கு வழங்க விரும்பினால் 6 இலட்சம் ரூபாவிற்கு விற்க்க தயாராக இருப்பதாக ஒருநாள் அவகாசம் வழங்கி அறிக்கை வெளியிட்டிருந்தார்.இந்நிலையில் தற்போது காளையை இறையாக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.