ஏழு தமிழர் விடுதலை: முதற்கட்ட நிலைப்பாட்டை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

0

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக சிறைவாசம் அனுபவித்துவருகிற பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுவிப்பது தொடர்பான முடிவினை தமிழக அரசே மேற்கொள்ளலாம் என இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது டெல்லி உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தமிழின உணர்வாளர்களும் வரவேற்றுள்ள சூழலில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து தமிழக அரசின் நிலையை விளக்கியுள்ளார் மூத்த அமைச்சர் ஜெயக்குமார்.

செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில் அரசு உறுதியாக இருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆராய்ந்து விரைந்து முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் “ராஜூவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முதல்வர் பழனிசாமி உரிய முடிவு எடுப்பார்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.