ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி குற்றம்சாட்டப்பட்ட இலங்கையருக்கு ஆதரவாக கொழும்பில் போராட்டம்

0

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக கூறப்பட்டு அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையரான மொஹமட் கமீர் நிலார் நிஸாம்தீனை விடுவிக்க வேண்டும் என்றுக்கோரி கையெழுத்து போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவரின் நண்பர்களும் உறவினர்களும் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இது குறித்து அவர்கள் குறிப்பிடுகையில்,

குறிப்பு புத்தகம் ஒன்றை வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிஸாம்டீன் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புகளை கொண்டிருக்கவில்லை. குறித்த குறிப்பு புத்தகத்தில் நிஸாம்தீனின் கையெழுத்துக்கள் இருக்கவில்லை. இந்தநிலையில் அவர் அவுஸ்திரேலியாவில் இருந்தவாறே டியூனியசியாவுக்கு சென்று வந்தார் என்றும் அமெரிக்காவுக்கு சென்று வந்தார் என்று பொய்யான கதைகளை ஊடகங்கள் கூறிவருகின்றன.

அத்துடன் அவரின் நிழல்படத்தை பிரசுரிக்கின்றன அதற்கு அப்பால் அவரின் நிழல்படத்துடன் ஐ.எஸ் தீவிரவாதிகளை தொடர்புப்படுத்தும் வகையில் சில ஊடகங்கள் செயற்படுகின்றன குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, நிஸாம்தீனை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கும் அனுமதிக்கப்படவில்லை எனவே ஊகங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள குற்றமற்ற நிஸாம்தீனை விடுவிக்க வேண்டும் என்று இணையவழி கையொப்ப திரட்டல் கோரிக்கை அமைந்துள்ளது.

திருகோணமலை, தம்பலகாமம் கமநலசேவை நிலையத்திற்கு முன்னால் விபத்திற்குள்ளாகி உயிரிழந்த உயர்தர மாணவியின் மரணத்திற்கு காரணமான சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதிமான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கு கந்தளாய் நீதிமன்றில் நீதிபதி துசித்த டம்மிக்க உதுவவிதான முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது ஏற்கனவே கைதாகி 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிண்ணியாவைச் சார்ந்த குறித்த சந்தேகநபரை தம்பலகாமம் பொலிஸார் ஆஜர் செய்திருந்தனர்.

குறித்த விபத்தில் இறந்தவரான 18 வயதான சுந்தரலிங்கம் பிரியதர்சினியின் சகோதரன் மற்றும் உறவினர்கள் நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்ததுடன் குறித்த விடயம் விபத்தல்ல என்பதனை நீதவானுக்கு தெளிவுபடுத்தினர்.

விபத்து குறித்து பிரியதர்சினியின் சகோதரன் தெரிவிக்கையில்,

“எனது சகோதரி குறித்த தினத்தில் வீதியில் நடந்து சென்ற வேளை பகிடிவதை புரியும் நோக்கில் வெள்ளை நிற வாகனத்தை சந்தேகநபர் ஓட்டி வந்த நிலையிலே எனது சகோதரியின் மீது மோதி தள்ளியுள்ளார். அவர் மட்டுமன்றி கூடச்சென்ற மற்றைய சகோதரியும் காயப்பட்டார் எனவே இது ஒரு விபத்தல்ல” என நீதவானுக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேகநபரான கிண்ணியாவைச் சார்ந்த புகாரி மொகமட் நசீர் வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை கொண்டிருக்கவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொலிஸார் நீதிமன்றில் அறிக்கையிட்டுள்ளதுடன் வாகனமும் புதியது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபரை நீதிமன்றில் பொலிஸார் முன்னிலைப்படுத்திய நிலையில் மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.