கருணா உட்பட மட்டக்களப்பு போராளிகளின் தியாகத்தை நான் ஒருபோதும் கொச்சைப்படுத்தவிரும்பவில்லையென தலைவர் பிரபாகரன் தங்களிடம் கூறியதாக விடுதலைப்புலிகளின் முன்னாள் செயற்பாட்டாளர் கிருஸ்ணா அம்பலவாணர் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம் என்ற நூல் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை சுவிட்சர்லாந்து செம்மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது சிறப்புரையாற்றிய கிருஸ்ணா அம்பலவாணர் கருணாவை துரோகி என ஏன் நீங்கள் இன்னும் கூறாமல் இருக்கின்றீர்கள் என நாங்கள் கேட்டதிற்கு தலைவர் பிரபாகரன் சொன்ன பதில் இதுவாகும் என தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரிந்த விடயம் ஊடகவியலாளர் சிவராமிற்கு தெரியும் என இரா.துரைரத்தினம் தனது நூலில் சுட்டிக்காட்டுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான அழகு குணசீலன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் இரா.துரைரத்தினத்தின் செய்திகளின் மறுபக்கம் என்ற நூல் அறிமுகவிழா சுவிஸ் நடைபெற்றுள்ளது.
கருணாவின் பிளவில் மறைக்கப்பட்டுள்ள இன்னும் பல விடயங்கள்.. ( காலம் கடந்து வெளிவரும் உண்மைகள்)
கருணா பிரிவதற்கு முன் சிவராம் எதற்காக கொக்கட்டிச்சோலைக்கு சென்றார்?
நீண்ட கால நண்பனான நூலாசிரியர் இரா.துரைரத்தினத்திடம், சிவராம் கொக்கட்டிச்சோலை பயணத்தை மறைத்தது ஏன்?
உண்மையில் சிவராமின் நிலை என்ன எனும் பல மர்ம முடிச்சுக்களுக்கு பதில் வழங்குகின்றார் செய்திகளின் மறுபக்கம் நூலின் ஆசிரியர் இரா.துரைரத்தினம்.
இந்த புத்தகத்தில் இன்னும் 29 சிறப்பு அரசியல் தொகுப்புக்கள் உள்ளன.
அவற்றை பெற்றுக் கொள்ள வேண்டுமானால் கீழ் காணும் மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளுங்கள்.