கள்ளகாதலுக்காக குழந்தைகளை கொன்று கணவனுக்கு கறை ஏற்படுத்தி சிறை சென்ற அபிராமி இன்னும் திருந்தவில்லை ! அதிகாரிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
கடந்த சில நாட்களாக தமிழ் நாட்டை கதிகலங்க வைத்தவர் அபிராமி. அத்தனை செய்தித்தாள்கள் இணையம் டிவி,வானொலி இப்படி எதை எடுத்தாலும் இந்த அபிராமி பற்றித் தான் பேச்சு. இவர் என்ன செய்தார் என எம் எல்லோருக்கும் தெரியும் தெரியாத ஒரு சிலருக்காக மீண்டும் ஞாபக படுத்துகிறோம். அபிராமி என்ற இந்த பெண் விஜய் என்ற நபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருக்கு 7 மற்றும் 5 வயதில் இரண்டு குழந்தைகள். கணவன் விஜய் வங்கி ஒன்றில் வேலை செய்கிறார். அழகான பெண்ணான அபிராமி பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரம் என்பவருடன் தகாத உறவை ஏற்படுத்தினார் .
அதன் விளைவாக தன்னுடைய குழந்தைகளை பாலில் விஷம் கலந்து கொலை செய்தார். எப்படியோ கணவர் விஜய் மட்டும் தப்பித்து விட்டார். கள்ளக் காதலனுடன் தப்பிச் சென்ற அபிராமியை தனிக்குழு அமைத்து பொலிஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்..
சிறைக்கு சென்ற அபிராமி என்ன ஆனார் என்று தேடி பார்த்த போது பொலீஸாரே அபிராமி புழல் சிறையில் என்ன செய்கிறார் என்பதை வெளியிட்டுள்ளனர். சிறைக்கு சென்ற அபிராமி அடங்கியதாக தெரியவில்லையாம். உணவு உண்னாது அழுதுகொண்டு இருகிறாராம்.
குழந்தைகளை கொன்றுவிட்ட கோவத்தில் அழுகிறார் என்று சக கைதிகள் அருகில் சென்றால் எனக்கு கிடைக்க இருந்த வாழ்க்கை நாசமாக போய்விட்டது என முணுமுணுத்த படி செல்கிறாராம். இதனால் கைதிகளுக்கு கூட கோபம் வருகிறதாம்.சிறை சென்ற பின்பு கூட தான் செய்த தவறை நினைக்காது கள்ளக் காதல் பற்றி நினைக்கும் இந்த அபிராமியை போல் யாரும் பிறக்க வேண்டாம் என வேண்டிக் கொள்வோம்.