காரைநகரில் அபூர்வ மரம்! ஆச்சிரியத்துடன் காணும் மக்கள்

0

யாழ்ப்பாணம் காரைநகரில் பேரீச்சை மரம் ஒன்று பழுத்துத் தொங்கும் அபூர்வம் நிகழ்ந்துள்ளது.

காரைநகர் திக்கரை முருகமூர்த்திகோவில் வீதியில் உள்ள பொன்னம்பலவாணர் ஐயா என அழைக்கப்படுபவர் வீட்டிலேயே குறித்த பேரீச்சை காய்த்துள்ளது.

நீண்ட காலமாக வளர்க்கப்பட்டுவந்த பேரீச்சை மரம் உயரமாக வளர்ந்துள்ள நிலையிலேயே இவ்வாறு காய்த்துப் பழுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சிலரது வீடுகளில் பேரீச்சை மரங்கள் நடப்பட்டு உயரமாக வளர்ந்துள்ளபோதிலும் இதுவரை காய்ப்பதில்லை.

கடந்த வருடமும் சிலரது வீட்டில் உள்ள பேரீச்சை மரங்கள் காய்த்துப் பழுத்திருந்தமை தெரிந்ததே. இந்த நிலையிலேயே இவ்வருடமும் பேரீச்சை மரங்கள் காய்த்துப் பழுத்துள்ளன.

மத்திய கிழக்கு நாடுகள் போன்ற வெப்பவலய நாடுகளின் பெரும் பொருளாதாரப் பயிர்ச்செய்கையாக விளங்கும் பேரீச்சை மரம் இலங்கை போன்ற பருவக்காற்று மழைக் காலநிலை நிலவுகின்ற நாடுகளில் காய்த்துப் பழுப்பது அபூர்வமான நிகழ்வு என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

Leave A Reply

Your email address will not be published.