கிரிக்கெட் சாதனைகளை இலகுவாக காலி செய்யும் கோலி ! மீண்டும் புதிய சாதனை படைப்பு

0

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய கேப்டன் விராட் கோலி வேகமாக 6000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா, 3 ,20 போட்டிகள் , 3 ஒருநாள் போட்டிகள், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து வென்றாலும், 3வது டெஸ்டில் இந்தியா வென்று அசத்தியது. இதன் மூலம் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கின்றது.

ரோஸ் பவுல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலி 9 ரன்களை எடுத்த போது 6000 டெஸ்ட் ரன்களை கடந்தார்.

70வது டெஸ்டில் விளையாடி வரும் விராட் கோலி தனது 119வது இன்னிங்ஸில் இந்த மைல் கல்லை எட்டியுள்ளார். இந்திய வீரர்களில் வேகமாக இந்த சாதனையை படைத்தவர்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் சுனில் கவாஸ்கர் உள்ளார்.

வேகமாக 6000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியல் :
1) சுனில் கவாஸ்கர் – 65 டெஸ்ட், 117 இன்னிங்ஸ்
2) விராட் கோலி – 70 டெஸ்ட், 117 இன்னிங்ஸ்
3) விரேந்திர சேவாக் – 72 டெஸ்ட், 123 இன்னிங்ஸ்
4) ராகுல் டிராவிட் – 73 டெஸ்ட், 125 இன்னிங்ஸ்
5) சச்சின் டெண்டுல்கர் – 76 டெஸ்ட், 120 இன்னிங்ஸ்

மிக குறைந்த இன்னிங்ஸில் 5000 ரன்னிலிருந்து 6000 ரன்களை கடந்துள்ளார். முன்பு 1000 ரன்களை கடந்ததை விட தற்போது வெறும் 14 இன்னிங்ஸில் கடைசி 1000 ரன்களை கடந்து இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.