கிளிநொச்சியில் உடைக்கப்பட்ட செங்கல் சுவர்களை தொல்லியல் குழு ஆய்வு

0

கிளிநொச்சி டிப்போச் சந்தியில் 2009 க்கு பின்னர் அமைக்கப்பட்ட புதிய செங்கல் சுவர்கள் கடந்த 16 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முன்னிலையில் கரைச்சி பிரதேச சபையினரால் அகற்றப்பட்டது. குறித்த சம்பவம் தென்னிலங்கையில் தொல்லியல் சின்னங்கள் உடைக்கப்பட்டதாக செய்திகள் பரவியதனை தொடர்ந்து நேற்று(18-09-2018) வவுனியாவிலிருந்து வருகை தந்த விசேட தொல்லியல் குழு ஒன்று ஆய்வில் ஈடுப்பட்டது. வவுனியா தொல்பியல் திணைக்கள உயரதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குறிதத் பகுதியில் ஆய்வு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்

ஏற்கனவே நகர திட்டமிடல் அதிகார சபையினால் பசுமை பூங்கா அமைப்பதற்காக அந்தப் பகுதியில் காணப்பட்ட செங்கல் சுவரும், மற்றய பகுதியில் கிளிநாச்சி பொது சந்தை அமைக்கும் போது அங்கிருந்த செங்கல் சுவரும் சில வருடங்களுக்கு முன் அகற்றபபட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த 16ம் திகதி மற்றய பகுதியில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வந்த பிரதேசத்தில் வடிகால் ஒன்றை அமைப்பதற்காக அகற்றப்பட்டது.

குறித்த பணி இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் பா ம உ சிறிதரன் அவர்களும் அவ்விடத்தில் பிரசன்னமாகியிருந்த நிலையில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் தொல்பொருள் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
அதேவேளை தனது தலைமையில் குறித்த பகுதி அழிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சார்ந்த செய்திகளும் வெளியிடப்பட்டிருந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் உண்மை நிலையைஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக விசேட தொல்லியல் குழு ஆய்வுகளை மேற்கொண்டது.

Leave A Reply

Your email address will not be published.