கிளிநொச்சியில் சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஐயர் கோயிலை விட்டு துரத்தப்பட்டார் ! சபாஷ் சரியான தண்டனை

0

கிளிநொச்சி கோரக்கன் கட்டுப்பகுதியில் சிறுவனைக் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய பூசகர் பொதுமக்களின் கடும் எதிர்ப்பையடுத்து நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி கோரக்கன் கட்டு பகுதியில் உள்ள நாகதம்பிரான் ஆலயத்தின் திருவிழா பூசைக்காக கிளிநொச்சி நகரிற்கு அண்மையிலுள்ள ஆலயம் ஒன்றில் பூசை செய்து வந்த பூசகர் அழைக்கப்பட்டு பூசைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், ஆலயத்திற்கு பூசை செய்வதற்கு வந்த பூசகர் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனை தன்னுடைய மோட்டார் சைக்கிளில் கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்று அங்கு அறையொன்றில் நாள் முழுவதும் பூட்டி வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதால் பாதிக்கப்பட்ட சிறுவன் கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பூசகரை பாதுகாக்கும் வகையில் ஆலய நிர்வாகம் செயற்பட்டதையடுத்து பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் பூசகர் நேற்று மாலையுடன் நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதே வேளை பாதிக்கப்பட்ட சிறுவன் தொடர்ந்தும் கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.