கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் 2ஆவது புத்தர் சிலை வைக்க முயற்சி! தடுத்து நிறுத்த மாணவர்கள் கோரிக்கை!!

0

அறிவியல் நகரில் உள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் 2ஆவது புத்தர் சிலை மற்றும் அரச மரம் நடும் முயற்சி நாளை அதிகாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே வளாகத்தில் ஒரு புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதுடன் அரச மரம் ஒன்றும் நாட்டப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குறித்த புத்தர் சிலையை அகற்றி அனைத்து மத தலங்களுக்காக ஒதுக்கபட்ட பகுதியில் வைப்பதாக வளாக நிர்வாகத்தால் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நாளைய தினம் அனைத்து மத தலங்களுக்கான பகுதியில் 2ஆவதுபுத்தர் சிலையை நிறுவ முயற்சி இடம்பெறுவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். விடுமுறை நாளில் திட்டமிட்டு மேற்கொள்ளும் இந்த முயற்சியை தடுத்து நிறுத்துமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கெனவே நிறுவப்பட்ட புத்தர் சிலையை அகற்றி அனைத்து மத தலங்களுக்கான பகுதியில் நிறுவுவதே பாரபட்சமின்ற செயலாக அமையும் என்றும் மாணவர்கள் கூறுகின்றனர்.

மத ரீதியிலான பாரபட்சமான இந்த செயற்பாடு மாணவர்கள் இடையே தேவையற்ற முரண்பாடுகளை ஏற்படுத்தும் என்றும் இதனை தடுத்து நிறுத்துமாறும் கிளிநொச்சி பொறியியல் பீட மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.