குழந்தைகளே போயாச்சு.. இனி நான் இருந்தால் என்ன? செத்தால் என்ன? கள்ளகாதலுக்காக குழந்தைகளை கொன்ற பாதகியின் கதறல்

0

குழந்தைகளே போயாச்சு, இனி நான் இருந்தால் என்ன செத்தால் என்ன என்று கேட்டு கணவனுக்கும் உறவினர்களுக்கும் எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார் குன்றத்தூர் அபிராமி. குன்றத்தூர் அகஸ்தீஸ்வரர் கோவில் தெருவில் வசிப்பவர் விஜய் (30). சென்னையில் தனியார் வங்கியில் கடன் வாங்கி கொடுக்கும் பிரிவில் பணியாற்றுகிறார். இவருடைய மனைவி அபிராமி (25). இவர்களுக்கு அஜய், கார்னிகா ஆகிய குழந்தைகள் இருந்தனர்.

இந்நிலையில் விஜய்க்கு வங்கியில் நிலுவை பணிகள் இருந்ததால் அவர் நேற்று முன் தினம் இரவு வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து அவர் நேற்று அதிகாலை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் வெளியே அபிராமியின் இரு சக்கர வாகனம் இல்லாததால் அவர் எங்கேனும் வெளியே சென்றிருக்கலாம் என நினைத்தார்.

பின்னர் நீண்ட நேரமாகியும் வராததால் அவரது தாய் வீட்டுக்கு சென்று கேட்டார். அங்கு அவர் வரவில்லை என்றதும் சந்தேகமடைந்த விஜய், மீண்டும் வீட்டுக்கு சென்ற போது கதவு வெளிப்பக்கமாக சாத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து உள்ளே போன விஜய் குழந்தைகள் சடலமாக கிடப்பதை கண்டு கதறி அழுதார்.

இதையடுத்து சிறிது நேரத்தில் விஜய்க்கும் அவரது உறவினர்களுக்கும் அபிராமியின் செல்போனில் இருந்து எஸ்எம்எஸ் வந்தது. அதில் என் குழந்தைகளே போய்விட்டனர். இனி நான் இருந்தால் என்ன செத்தால் என்ன என கேட்டிருந்தார்.

இதையடுத்து எதற்காக இப்படி செய்தாய் என கேட்டு விஜய், அபிராமிக்கு எஸ்எம்எஸ் அனுப்பினார். ஆனால் அதற்கு அவர் பதில் அனுப்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அபிராமியின் செல்போன் சிக்னல் கடைசியாக கோயம்பேடு பஸ் நிலையத்தை காட்டியது. இதைவைத்து இருசக்கர வாகனத்தை கோயம்பேட்டில் விட்டு விட்டு அபிராமி வெளியூர் தப்பியிருக்கலாம் என யூகித்தனர்.

இதனிடையே அவருக்கு சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதல் இருந்ததை விஜய் போலீஸாரிடம் கூறினார். இதையடுத்து குன்றத்தூர் பிரியாணி கடையில் வேலைபார்க்கும் சுந்தரத்தை போலீஸார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் அபிராமி நாகர்கோவில் அல்லது புதுச்சேரி செல்வதாக கூறியிருந்தது போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து நாகர்கோவிலில் இருந்த அபிராமியை போலீஸார் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.