கோலியின் கொண்டையில் குட்டிய இங்கிலாந்து ! தொடரை கைப்பற்றி அசத்தல்

0

இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்டில், 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி, தொடரை 3-1 என கைப்பற்றியது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2-1 என முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில் இரு அணிகள் மோதய நான்காவது டெஸ்ட் சவுத்தாம்டனில் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்கள், இந்தியா 273 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி, 271 ரன்களுக்கு[ ஆல் அவுட்டாகி இந்திய அணி 245 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இந்நிலையில் கடின இலக்கை துரத்திய இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து பவுலர்களை சமாளிக்க முடியாமல் தட்டுத்தடுமாறி அடுத்ததடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். தவான் (17), ராகுல் (0), புஜாரா (5) என டாப் ஆர்டர் வீரர்கள் வழக்கம் போல சொதப்பினர்.

அரைசதம் அடித்து கைகொடுத்த கேப்டன் கோலி (58), ரகானே (51) வெளியேற, போட்டி இங்கிலாந்து அணி பக்கமாக திரும்பியது. அடுத்து பாண்டியா ‘டக்’ அவுட்டானார். பண்ட் (18) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

பின் வந்த இஷாந்த் (0), ஷமி (8) வெளியேற, இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 184 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தவிர, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் இங்கிலாந்து அணி 3-1 வென்றது.

Leave A Reply

Your email address will not be published.