சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட சிங்கள மீனவர்கள் மடக்கிப்பிடிப்பு ! பக்கச்சார்பாக நடந்த பொலிஸார் ! வடமராட்சியில் பதற்றம்

0

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு மீனவர்களை, அப்பகுதி மீனவர்கள் மடக்கிக் பிடித்து தடுத்து வைத்துள்ளனர்.இச்சம்பவம் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து அங்கு பொலிஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மீனவர்களினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தென்னிலங்கை மீனவர்களை பொலிஸார் பலவந்தமாக அழைத்துச் சென்றதை தொடர்ந்து அங்கு பதட்டமான நிலை காணப்படுகின்றது.

பதற்றத்திற்கு மத்தியில், தடுத்துவைக்கப்பட்டிருந்த மீனவர்களை பொலிஸார் திடீரென அழைத்துச் சென்றுள்ளனர்.இதனால் மேலும் குழப்பம் அதிகரித்ததுடன் பொலிஸாருக்கும் அப்பகுதி மீனவர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது .

தடுத்துவைக்கப்பட்டிருந்த எட்டு பேரில் ஆறு பேரையே பொலிஸார் அழைத்துச் சென்றிருந்த நிலையில், ஏனைய இருவரும் அருட்தந்தை ஒருவர் மூலமாக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இதேவேளை அங்கு நின்ற மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவுசெய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.