சிங்களவருடனான நல்லிணக்கமும் நெல்லெண்ணை தோசையும் ! மணி அண்ணை என்ன சொல்லுறார் ?

0

சிங்கள பௌத்த பேரினவாதிகள் நல்லிணக்கம் என்னும் பெயரில் அத்துமீறல்களையும் அடாவடிகளையும் நல்லாட்சி என்னும் நரி ஆட்சியிலும் மேற்கொண்டு வருகின்றனர் .நேற்று முன்தினம் முல்லைத்தீவு தண்ணி முறிப்பு பகுதியில் தொல்பொருள் அகழ்வு என்னும் போர்வையில் புத்த சிலையை அமைத்து சிங்கள குடியேற்றத்தினை அமைப்பதற்காக புத்த பிக்குகள் மேற்கொண்ட முயற்சி பிரதேச இளைஞர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது .

இந்த சம்பவம் குறித்து பலதும் பத்தும் பேசும் மணி அண்ணை என்ன சொல்லுறார் என்று கீழே பாருங்கள் …….

நல்லிணக்கம் எண்டா வாங்க நல்வணக்கம் சொல்லுங்க.நாங்களும் சொல்லுவம்..வேணும் என்றால் நல்லெண்ணெய் விட்டு சுடச் சுட முறு முறு தோசை தரலாம் சாப்பிடுங்க.உழுந்து வடை பிடிக்குமா? ஒகே தரலாம் வயிறு நிறைய சாப்பிடுங்க. அதோட நிறுத்திக்கணும்.

தொல்பொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் புத்த சிலைகளை கொண்டு வாறது.அப்படியே புத்தர் சிலையை வழிபட என்று நாசுக்காக நாலு பேரை கூட்டிட்டு வந்து வீடு கட்டி கொடுக்குறது பிறகு நாலு பேரை நானூறு பேர் ஆக்கி சிங்கள கிராமம் ஆக்கி அதுக்கு சிங்கள பெயர் வைக்குறது இதெல்லாம் நல்லதுக்கு இல்லை. இதை தானே அன்று தொடக்கம் இன்று வரை செய்யுறிங்க.

இப்ப ஒரு கூட்டம் கிளம்பும் பாருங்கோ நாங்களும் தானே கொழும்பில இருக்குறம் வெள்ளவத்தை ஐபிசி ரோட்டில பிள்ளையார் கோயில் இருக்கு தானே.அப்ப சிங்களவர் முல்லைத்தீவில இருந்தால் என்ன? அங்க புத்த கோயில் வைச்சா என்ன என்று.அட மரமண்டைகளா கொழும்பில நீ இருக்குற வீடோ அல்லது சைவ ஆலயங்களோ சட்டத்திற்கு புறம்பாக அத்துமீறி அடாவடி செய்து ஆக்கிரமிக்கபட்டதல்ல. அதை புரிஞ்சு கொள்ளுங்க.

கொழும்பில ஒரு பன்சல வுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு சின்ன பிள்ளையார் சிலை கொண்டு போய் வைச்சுபாரு .அப்ப தெரியும் என்ன செய்வாங்க என்று.கொழும்பில இருந்து கண்டி வரை காது கிழிய கத்துவாங்க.பிள்ளையார் சிலை இரவோடு இரவாக காணாமல் போனோர் பட்டியலில் இணையும் …. தில் இருந்தா வைச்சு பாரு.

Leave A Reply

Your email address will not be published.