தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்க இராணுவம் பொலிஸ் தடை ஏற்படுத்த முடியாது ! நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு

0

தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளை எதுவிதமான தடையுமின்றி நாளை 27/09/2018 நடாத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது .

யாழ்ப்பாணம் மாநகரசபையால் நாளையதினம் தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவேந்தலை நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில் அதற்கு தடை விதிக்குமாறு கோரி பொலிஸார் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்தனர் .இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது .இதன் போது நாளைய தினம் யாழ்ப்பாணம் மாநகர சபையினால் நடத்தப்படவுள்ள தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது .
.
நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரப்பட்டமைக்கு எதிராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமாகிய சுமந்திரன் ஆஜராகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

நாளைய தினம் ஏற்கனவே திட்டமிட்டபடி நல்லூரில் தியாகி திலீபன் அவர்களின் இறுதி நாள் நினைவேந்தல் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

Leave A Reply

Your email address will not be published.