நடுவானில் விமானத்தின் பிரதான கதவினை திறக்க முயன்ற பயணி ! அதிர்ச்சியில் உறைந்த பயணிகள் ! காரணம் இதுதான்!

0

டெல்லியிலிருந்து பாட்னாவுக்குச் சென்ற விமானத்தில் டாய்லெட் என்று நினைத்து மெயின் டோரைத் திறக்க முயன்ற பயணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் சனிக்கிழமையன்று(22) தலைநகர் டெல்லியிலிருந்து பாட்னா நோக்கி கோஏர் (GoAir) நிறுவனத்தின் G8 149 என்ற விமானம் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. அதில், பாட்னாவைச் சேர்ந்த பயணியொருவர் முதன்முதலாக விமானப்பயணம் மேற்கொண்டார்.

முதல் பயணம் என்பதால் அவருக்கு விமானத்தில் உள்ள நடைமுறைகள் பழக்கவழக்கங்கள் பற்றி அதிகம் தெரியவில்லை.

இந்நிலையில், நடுவானில் விமானம் சென்று கொண்டிருக்கும் போது கழிப்பறை செல்வதற்காக எழுந்த அந்த பயணி தவறுதலாக விமானத்தின் மெயின் கதவைத் திறக்க முயன்றார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற பயணிகள் கூச்சல்போட்டு அவரைத் தடுத்தனர்.

ஆனால், சூழ்நிலை புரியாத அந்தப் பயணி மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மீண்டும் கதவை திறக்க முயன்றுள்ளார். இதனையடுத்து விமானப் பணியாளர்கள் வந்து அவரைத் தடுத்து நிறுத்திக் கழிப்பறைக்கு அனுப்பி வைத்தார்கள் .

இருந்தபோதிலும், அவரது செயல் விமானத்தை விபத்துக்குள்ளாக்கும் வகையில் அமைந்தமையால் விமானம் தரையிறங்கியதும் அவரை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

இதேவேளை, நடுவானில் விமானத்தின் மெயின் டோரை திறக்க முயன்ற இந்த சம்பவம் பயணிகளைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.