நான் இறந்த பிறகு மொத்தமாகவோ சில்லறையாகவோ தமிழ் இனத்தை விற்கலாம் – கொள்கை மாறாத தலைவர் கூறியது

0

மணலாற்றில் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தினரின் இறுகிய முற்றுகைக்குள் போராளிகளே மூச்சு திணறிய நிலையில் இருந்த போது, தலைவரை எப்படியாவது பாதுகாப்பாக வெளியேற்றி விட்டால் போராட்டம் பாதுகாக்கப்படும் என்றுணர்ந்த தளபதிகள் பலர், “சிறிது காலம் வேறிடத்தில் பாதுகாப்பாக இருந்து விட்டு பின்னர் வந்து போராட்டத்தை வழிப்படுத்துங்கள்” என்று வற்புறுத்திய போது,

“ஒரு போதும் நான் புறமுதுகிட்டு ஓடப் போவதில்லை. ஒன்றில் இந்த முற்றுகையை தகர்த்து போரில் வெற்றி பெற்றுவேன். இல்லையேல் இந்த மண்ணிலேயே தான் வீரச்சாவடைவேன்” என்று கூறி தளபதிகளின் வேண்டுகோளை நிராகரித்து ஆக்கிரமிப்புப் படைகளுடனான யுத்தத்தை வழிப்படுத்துவதிலேயே குறியாக இருந்தாராம்!

அதே காலப்பகுதியில் தலைவரின் நிலையை உணர்ந்த தமிழகத்தில் தங்கியிருந்த போராளிகளும் இந்திய உளவுப் பிரிவினருடன் ஒரு சமரசத்திற்கு வரும் நோக்குடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார்கள். அவ்வேளை இந்திய உளவுத் துறையினர், “பிரபாகரன் ஆயுதங்கள் முழுவதையும் ஒப்படைத்து விட்டு தங்களிடம் சரணடைந்தால் விடுதலைப்புலிகளுக்கு 200 கோடியும் தமிழ் மக்களின் புனர்வாழ்விற்காக 500 கோடியும் தருவதாக கூறினார்களாம்.

இதனால் மகிழ்வடைந்த போராளிகள் (பணத்திற்காக ஆசைப்பட்டல்ல எப்படியாவது தலைவரைக் காப்பாற்றி விடலாம் என்ற ஒரு அவாவில்) உடனடியாகவே இந்திய உளவுப் பிரிவினரின் செய்தியை தலைவருக்கு அனுப்பினார்கள்! அன்றை நிலையில் விடுதலைப்புலிகளிடம் இருந்த ஆயுதங்களின் மொத்தப் பெறுமதியின் பல மடங்கு இந்தியா தருவதாக ஒப்புக்கொண்ட பணத்தின் பெறுமதி என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர் போராளிகளுக்கு புரியும் படி சூசகமாகப் பதில் பின்வருமாறு அனுப்பினாராம்,

“நான் இறந்த பிறகு மொத்தமாகவோ சில்லறையாகவோ இனத்தையும் சரி இயக்கத்தையும் சரி யாரும் யாரிற்கும் விற்கலாம்!”

கொலைக்களங்களில் நின்ற போதும்
கொள்கை மாறாத மாவீரன் எங்கள் தலைவன்!

#தேசியத்_தலைவர்!

Leave A Reply

Your email address will not be published.