நிறைமாத கர்ப்பிணி பெண்ணை தூக்கிக்கொண்டு ஓடிய பொலிஸ் ! தாயையும் சேயையும் காப்பாற்றிய காக்கி ! புகைப்படம் உள்ளே
ஹரியானா மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணை, தன்னுடைய கையிலே தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்த பொலிஸாருக்கு பல பகுதிகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மகேஷ்- பாவனா தம்பதியினர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்துள்ளனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பாவனாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மதுரா ரயில் நிலையத்தை வந்தடைந்ததும், பொலிஸார் மற்றும் ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால், ஆட்டோவின் மூலம் பாவனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பெண்கள் மகப்பேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் வாகனம் எதுவும் கிடைக்காததால், பொலிஸாரே தன்னுடைய கைகளில் பாவனாவை தூக்கி கொண்டு மருத்துவனையில் சேர்த்துள்ளார். அங்கு அனுமதிக்கப்பட்ட சில மணிநேரங்களில் பாவனாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.
சரியான நேரத்தில் பாவனா அனுமதிக்கப்பட்டதால், யாருக்கும் எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை. தாய்- குழந்தை இருவருமே நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாவனாவின் கணவர் கூறுகையில், ரயிலில் இருந்து நங்கள் இறங்கியதும், வழி தெரியாமல் தவித்தோம். இது எங்களுக்கு புதிய இடம் என்பதால் அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டோம். ஆனால் யாருமே எங்களுக்கு உதவ முன்வரவில்லை.
என் மனைவியை மருத்துவமனையில் சேர்த்ததும், அந்த பொலிஸார் சென்றுவிட்டார். மகிழ்ச்சியில் இருந்த நான் அவருக்கு ஒரு நன்றி கூட கூறவில்லை என தெரிவித்துள்ளார்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து ரயில்வே துறை பொலிஸார் Sonu Kumar Rajora கூறுகையில், நான் என்னுடைய கடமையை தான் செய்தேன். அந்த தம்பதியினர் இந்த இடத்திற்கு புதிது என்பதால் வழி தெரியாமல் தவித்தனர் என விளக்கம் கொடுத்துள்ளார்.