பணத்திற்காக பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய ஆசிரிய மன்மதன்! தெளிவான புகைப்படங்கள் இணைப்பு !

0

ஏற்கனவே திருமணம் முடித்த இரண்டு மனைவிகளையும், பிள்ளைகளையும் ஏமாற்றி விட்டு மூன்றாவது தடவையாக பிறிதொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்த ஆசிரியர் ஒருவர் இன்று வசமாக மாட்டியுள்ளார்.இந்த சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது ,

இரண்டாவது மனைவிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த காதல் மன்னனின் மூன்றாவது திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது . நேராக திருமண மண்டபத்திற்கு சென்ற இரண்டாவது மனைவி மணப் பெண்ணின் உறவினர்களுக்கு குறித்த ஆசிரியரின் மனைவி தான் என்று கூறியுள்ளார் .இதனால் அதிர்ச்சியடைந்த மண பெண்ணின் உறவினர்கள் திருமணத்தை உடனடியாக நிறுத்தியுள்ளார்கள்..

கண்ணா மூன்றாவது தடவையாகவும் லட்டு தின்ன ஆசையா என்ற பாணியில் கனவுகளுடன் மணமகன் கோலத்தில் இருந்த ஆசிரிய மன்மதனுக்கு பலத்த ஏமாற்றம் ஏற்பட்டது .ஆஹா வடை போச்சே .

இந்த ஆசிரியர் 15 வருடங்களுக்கு முன்னர் ஒரு பெண்ணை மணம் முடித்துள்ளார் .இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையாகிய பின்னர் இந்த மன்மதன் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளையும் அநாதரவாக கைவிட்டு கிளிநொச்சியில் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார் .

முதலாவது மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்யாத காரணத்தினால் இரண்டாவது மனைவியை சட்டப்படி திருமணம் செய்து கொள்ள முடியவில்லை .

இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வந்த ஆசிரியர் மூன்றாவது லட்டு தின்ன ஆசைப்பட்டு இரண்டாவது மனைவியை கைவிட்டு விட்டு வவுனியாவில் மூன்றாவது பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்துள்ளார் .எனிலும் அவரது முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது .

குறித்த ஆசிரியர் கிளிநொச்சி பரந்தனில் உள்ள பாடசாலை ஒன்றில் சித்திர பாட ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார் .இவரது பெயர் முத்துக்குமார் சின்னையா . இவர் மிகவும் பண ஆசை பிடித்தவர் என்று அறிய முடிகின்றது .அதன் காரணமாக பணத்திற்க்காக பெண்களை திருமணம் செய்து பிறகு கழற்றி விடுவதை தொழிலாக கொண்டுள்ளார் .

கடந்த நான்கு வருடங்களில் இவர் மேலும் பல பெண்களை பணத்திற்காக காதலித்து பிறகு ஏமாற்றியுள்ளார் என்று அறிய முடிகின்றது .பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடியுள்ள இந்த ஆசிரிய மன்மதன் உடனடியாக ஆசிரியர் தொழிலில் இருந்து நிரந்தர பணி நீக்கம் செய்யப்படல் வேண்டும் .பணத்திற்காகவும் , காமத்துக்காகவும் பெண்களை காதலித்து ஏமாற்றும் காதல் மன்னர்களுக்கு இந்த ஆசிரியரின் சம்பவம் ஒரு பாடமாக அமைய வேண்டும் .

 

Leave A Reply

Your email address will not be published.