கவிதாயினி பூர்ணிமா கருணாகரனின் “பெட்டைக் காகங்களிடும் குயில் குஞ்சுகள் ” கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் !

0

பூர்ணிமா கருணாகரன் பல்திறமைகள் உள்ள ஒரு தமிழ் தேசியப்பற்றுள்ள தமிழச்சி .இவர் பலதுறைகளில் சாதித்து வரும் ஒரு பெண் . பூர்ணிமா கருணாகரன் அவர்கள் எழுதியுள்ள “பெட்டைக் காகங்களிடும் குயில் குஞ்சுகள் ” என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று மாலை 5 மணி தொடக்கம் 8 மணிவரை கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள தமிழ்ச்சங்கத்தில் இடம்பெற உள்ளது .

இந்த நூல் வெளியீட்டு விழா பிரபல வைத்தியர் டாக்டர் அனுஷ்யந்தன் அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெறவுள்ளது . “பெட்டைக் காகங்களிடும் குயில் குஞ்சுகள் ” கவிதை நூலின் ஆசிரியர் கவிதாயினி பூர்ணிமா கருணாகரன் அவர்கள் மேலும் பல நூல்களை எழுதி சாதிக்க ஈழம் நியூஸ் இணையக்குழுமம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றது .

இன்றைத்தினம் கொழும்பு தமிழ்ச்சங்கத்திற்கு வருகை தந்து “பெட்டைக் காகங்களிடும் குயில் குஞ்சுகள் ” நூல் வெளியீட்டு விழாவில் அனைவரும் கலந்து கொண்டு நூல் ஆசிரியரை ஊக்குவிக்கமாறு அன்புடன் அழைப்பு விடுக்கின்றோம்.

Leave A Reply

Your email address will not be published.