ஐரோப்பிய நாடொன்றில் வேலை பெற்று தருவதாக கூறி இளைஞரை ஏமாற்றிய பெண்ணொருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இத்தாலியில் தொழில் வாய்ப்பினை பெற்று தருவதாக கூறி பல இளைஞர்களை திருமணம் செய்து பெண் ஒருவர் பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
அம்பலந்தொட்ட பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணை திருமணம் செய்துள்ள இளைஞர் ஒருவர் பொலிஸில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் குறித்த இளைஞரை திருமணம் செய்து அவரது பணத்தினை மோசடி செய்து தலைமறைவாகியுள்ளார்.
குறித்த பெண் தங்கொடுவ பிரதேசத்தினை சேர்ந்தவர் என இளைஞர் தெரிவித்துள்ளார்.
தன்னுடன் திருமணம் ஆவதற்கு முன்னர் மற்றும் ஓர் நபரை திருமணம் செய்து இரு குழந்தைகள் உள்ளதாக பின்னர் தான் தனக்கு தெரியவந்ததாக இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.குறித்த பெண்ணை கைது செய்வதற்காக பொலிஸார் வலைவிரித்துள்ளார்கள் .