பஸ் சில்லுக்குள் சிக்குண்டு இளைஞன் சாவு – புளியங்குளத்தில் துயரம்!

0

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் பயணித்த இ.போ.சபைக்குச் சொந்தமான பேருந்தில் இறங்க முற்பட்ட இளைஞன் பேருந்தின் சில்லில் அகப்பட்டு உயிரிழந்தார் என்று புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் வவுனியா, புளியங்குளம் – பரசங்குளம் பகுதியில் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில்மணியளவில் இடம்பெற்றது.

சம்பவத்தில் மாங்குளம் பகுதியினை சேர்ந்த கோ. திருவள்ளுவர் (வயது-30) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த இளைஞர் ஒருவர் வவுனியா, புளியங்குளம், பரசங்குளம் பகுதியில் பேருந்தில் இருந்த இறங்க முற்பட்ட போது, அவருடைய பயணப்பை பேருந்தின் வாயில் பகுதியில் கொழுவுபட்டு இழுபட்டதில் கீழே விழுந்த இளைஞன் பேருந்தின் சில்லுக்குள் அகப்பட்டு உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள புளியங்குளம் பொலிஸார் இ.போ.சபை பேருந்தை தடுத்து வைத்துள்ளதுடன் அதன் சாரதியையும் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.