ஈபிடிபி உறுப்பினர் முருகையா தமிழ்ச்செல்வன்மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. ஈபிடிபியின் கிளிநொச்சிப் பிரிவான சந்திரகுமார் அணியில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் இவர், ஈபிடிபி மற்றும் சிங்கள அரசுக்கு சாதகமாக தமிழின விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
தமிழ்தேசியவாதிகள்மீது சேறு பூசுவதுடன் அவர்களைப் பற்றிய தகவல்களை சிங்கள இராணுவத்திற்கு வழங்கும் உளவாளியாகவும் செயற்பட்டுள்ளார். இந்த நிலையில் தமிழ் தேசிய உணர்வாளர்களால் இவர் நேற்று தாக்கப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட களத்தின் தகவல்கள் எப்படி துல்லியமாக இராணுவத்திற்க்கும் ஈபீடிபியின் இதயவீணைக்கும் முருகையா தமிழ்செல்வனே அனுப்பியுள்ளார் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர்.
களப்படப்பிடிப்பாளராகவிருந்து உடனுக்குடன் செய்திகளை ஈபிடிபி சந்திரகுமாருக்கும் இராணுவப்புலனாய்வுக்கும் அனுப்பிய இவர் தனது பெயரை சிங்களச்செல்வன் என மாற்றிக் கொள்ள வேண்டுமென்றுட் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினருக்கு காட்டிக் கொடுப்புக்களை செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் தொண்டைமான் நகரில் அழகான மாளிகை ஒன்றையும் இவர் கட்டியுள்ளார். அத்துடன் பிரதேச வாதத்தை தூண்டி கடந்த உள்ளுர் தேர்தலில் சந்திரகுமாருக்கு வாக்குகளை திரட்டிக் கொடுத்தும் சம்பாதித்துள்ளார்.