பெண் விரிவுரையாளரின் மரணத்திற்கு காரணம் கணவரா? கசியும் உண்மைகள் ! அதிர்ச்சி புகைப்படம் உள்ளே

0

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.

இந்த பெண் விரிவுரையாளர் வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணி பெண் ஆவார். இவரது மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்று பலராலும் சந்தேகிக்கப்பட்டுள்ள நிலையில் பெண்ணின் மரணம் தொடர்பில் மேலும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன .

இறந்த விரிவுரையாளர் நீரில் மூழ்கியமையினால் ஏற்பட்ட மூச்சு திணறலின் காரணமாகவே இறந்தார் என்று மரண அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .விரிவுரையாளர் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில் இந்த தற்கொலைக்கு காரணம் கணவர் செந்தூரானா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது .

குறித்த விரிவுரையாளர் இறப்பதற்கு முன்னர் பேஸ்புக்கில் பதிவிட்ட கவிதை அவர் மனதளவில் மிகவும் கவலையில் இருந்துள்ளார் என்பதனை மிகவும் தெட்ட தெளிவாக உணர்த்தி இருந்தது .இந்நிலையில் விரிவுரையாளரின் கணவர் செந்தூரன் தொடர்பில் மேலும் பல அதிர்ச்சி செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன .

விரிவுரையாளரின் கணவர் வன்னியூர் செந்தூரன் ஏற்கனவே ஒரு பெண்ணை பதிவுத்திருமணம் செய்து அப்பெண்ணை இடையில் கைவிட்டவர். அப்பெண் முகநூலில் நீதி கேட்டு அழுது குழறி தற்கொலை வரை சென்றுள்ளார் . .செந்தூரன் ஏற்கனவே திருமணம் முடித்தவர் என்பது மனைவிக்கு மறைக்கப்பட்டதா? மறைக்கப்பட்டமையினால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது .

விரிவுரையாளரின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பதனை கண்டுபிடிக்கும் முகமாக பொலிஸார் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .விசாரணைகள் முடிவடையும் வரை பொறுத்திருப்போம் .

 

Leave A Reply

Your email address will not be published.