போதநாயகியின் மரணத்துக்கு நீதி வேண்டும்? கணவர்மீது வலுக்கும் எதிர்ப்பு!!

0

போதநாயகி நடராஜாவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் அதற்கு காரணமான கணவர் செந்தூரனை கைது செய்ய வேண்டும் என்றும் எதிர்ப்புக்கள் வலுவடைந்து வருகின்றன. செந்தூரனின் கோரச் செயற்பாடு தெரியாமல், போதநாயகி மரணத்தின் போது அவருக்கு ஆறுதல் தெரிவித்த பலரும் இப்போது அவரை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களின் போதநாகயகியின் மரணத்திற்கு நீதி கோரும் குரல்கள் வலுவடைந்து வருகின்றன. பெண்கள், படைப்பாளிகள் பலரும் செந்தூரனை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வருகின்றனர்.

இந்த நிலையில் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றிய போதநாயகி நடராஜாவின் மரணத்துக்கு நீதிகோரி, இன்று போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்துக்குள் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றதுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடைபவனியாக சிறிது தூரம் சென்றும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

விரிவுரையாளர் போதநாயகியின் மரணத்துக்கான காரணத்தை உடனடியாக கண்டறியுமாறும் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கவேண்டுமெனவும், போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.