உயிரிழந்த கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின், மரணம் தற்கொலையாயின் தற்கொலைக்கு தூண்டியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கிழக்கு பல்கலை.திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் தொழிகள் திணைக்களத்தினர் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இப் போராட்டத்தில் கலந்துகொண்ட தொடர்பாடல் மற்றும் மொழிகள் திணைக்களத்தினரின் தலைவர் டாக்டர் வி.ஜே.நவீன்ராஜ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
உயிரிழந்த போதநாயகி தற்கொலை செய்தாரா? ஆல்லது கொலை செய்யப்பட்டாரா? ஏன்பது கண்டறிந்து ஒரு முடிவு தெரிய வேண்டும். ஒருவேளை அது தற்கொலை என்று கூறப்பட்டால் அவரை தற்கொலைக்கு தூண்டியவர் யார்.?என்பது கண்டறியப்பட வேண்டும். அல்லது கொலையாயின் கொலைக்கு காரணம் எது யாரால் கொலை செய்யப்பட்டார் என்பது தெரிய வேண்டும் என்றார்.
போராட்டத்தில் கலந்துகொண்ட போதநாயகியின் தாயார்,
பேதநாயகி திருமணமான காலம் முதல் அவர்களுடைய குடும்பத்தில் பல பிரச்சினைகள் இடம்பெற்று வந்தது அவருடைய கணவன் செந்தூரன் என்பவரால் பல கொடுமைகளுக்கு உட்பட்டிருந்தார்.
இவர் மரணம் தொடர்பாக கேள்வியுற்று அதிர்ச்சி அடையாமல் சதாரணமாக திருகோணமலைக்கு வந்தார். சடலத்தை தனது வீட்டில் வைக்க வேண்டும் என்று முரண்பட்டு இறுதி கிரியைக்கு கூட வரவில்லை என்றார்.
கிழக்குப் பல்கலைக் கழக திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் மொழிகள் திணைக்களத்திலிருந்து பிரதான வாயில் வரை ஊர்வலமாக வந்த இப் போராட்டத்தில் விரிவுரையாளர்கள் மாணவர்கள் என பல தரப்பினர் கலந்து கொண்டனர்.
இதே வேளை செந்துாரன் பல பெண்களுடன் படுத்தெழும்பிய வீடியோக்கள் அவனது கைத்தொலைபேசியின் நினைவு அட்டையில் இருந்து போநாயகியால் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் இது தொடர்பாக போதநாயகி அதிர்ச்சியுற்று கேட்ட போது கவிஞர்களுக்கு இது சகஜம் என கூறி சண்டையிட்டு போதநாயகியை கடுமையாகத் தாக்கியதாகவும் போதநாயகி தனது நண்பியிடம் தெரிவித்துள்ளார். காமுகன் செந்துாரன் தொடர்பான அதிர்ச்சித் தகவல்களுக்கு காத்திருங்கள்