பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் சர்மா, தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட்டில் வசித்து வந்தார். இவர் தனது 17 வயதான மூத்த மகளை, கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இதனால் கர்ப்பமான மூத்த மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது. ராஜேஷ் சர்மாவின் மனைவிக்கு சந்தேகம் வலுத்ததால் மகளிடம் விசாரித்துள்ளார்.அவர் அளித்த தகவலின்படி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, ராஜேஷ் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.
பெற்ற தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்தது நிரூபிக்கப்பட்டதை அடுத்து ராஜேஷ் சர்மாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 51 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. தொடர்ச்சியாக நாடு முழுவதும் பெண்களுக்கெதிரான பாலியல் ரீதியிலான குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறதென சமீபத்தில் இத்தகைய வழக்கு ஒன்றினை விசாரித்த நீதிமன்றம் கவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.