மக்கள் ஆதரவை பரியேறும் பெருமாள் பெற்று விட்டது, காட்சிகள் உயரும் – பிரபல தயாரிப்பாளர்

0

‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் மக்கள் ஆதரவை பரியேறும் பெருமாள் பெற்று விட்டது, காட்சிகள் உயரும் என்று பிரபல தயாரிப்பாளர் கூறியிருக்கிறார். #PariyerumPerumal

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் கதிர் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

கடந்த வாரம் செக்கச் சிவந்த வானம் வெளியானதால், பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு குறைத்தளவு தியேட்டர்களே கிடைத்தது. இருந்தாலும் இப்படத்திற்கு மக்கள் அதிக ஆதரவு கொடுத்து வருகிறார்கள். மேலும் தியேட்டர் குறைவாக இருப்பதாகவும், டிக்கெட் கிடைக்கவில்லையும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்கள்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தயாரிப்பாளர் பா.ரஞ்சித், ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்கு பெரும் ஆதரவு தந்து கொண்டிருக்கும் மக்களுக்கு மிக்க நன்றி!! நீங்கள் தரும் ஆதரவுக்கு ஏற்ற திரையரங்க காட்சிகள் உயர்த்துவதற்கு முயற்சித்து கொண்டிருக்கிறோம்.. ஏற்றம் வரும் காத்திருப்போம்!!! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கவனத்துக்கு’ என்று பதிவு செய்திருந்தார்.

தமிழ்திரை வரலாற்றில் ஒரு திரைப்படத்திற்கு மக்கள் ஆதரவே காட்சிகள் அதிகரிப்பை உறுதி செய்திருக்கிறது. இதில் சங்கங்களின் தலையீடு எப்பொழுதும் இருந்ததில்லை. இது எனது தனிப்பட்ட அனுபவமும் கூட( #அருவி #மாநகரம் ). மக்கள் ஆதரவை #பரியேறும்பெருமாள் பெற்றுவிட்டது! காட்சிகள் உயரும்!

இதற்கு தயாரிப்பாளர் சங்க பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, ‘தமிழ்திரை வரலாற்றில் ஒரு திரைப்படத்திற்கு மக்கள் ஆதரவே காட்சிகள் அதிகரிப்பை உறுதி செய்திருக்கிறது. இதில் சங்கங்களின் தலையீடு எப்பொழுதும் இருந்ததில்லை. இது எனது தனிப்பட்ட அனுபவமும் கூட (அருவி, மாநகரம்). மக்கள் ஆதரவை பரியேறும் பெருமாள் பெற்றுவிட்டது! காட்சிகள் உயரும்!’ என்று கூறியிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.