மனித மனங்களை நெகிழ்ச்சி அடைய வைத்த திருமண தம்பதிகள் ! பாராட்ட வேண்டிய திருமணம் ! படங்களே உள்ளே

0

இலங்கையில் பலரின் மனங்களை நெகிழ வைத்த திருமண வைபவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.ஆடம்பரம் இல்லாமல் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் மற்றும் பெற்றோரினால் கைவிடப்பட்ட பிள்ளைகளின் முன்னிலையில் திருமணம் நடத்தப்பட்டுள்ளது.மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு திருமணம் நடத்த திட்டமிட்டு, வெற்றிகரமாக முடித்துள்ளார்.

புகைப்பட கலைஞரான அருணசிறி என்ற இளைஞர் பயாஷானி என்ற பெண்ணுடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.இந்த திருமணம், இம்புலன்தன்ட முதியோர் இல்லத்தில் நடத்தப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு மேலும் பல பகுதிகளை சேர்ந்த முதியோர்களும், சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.பெற்றோரின் அன்பை இழந்த பிள்ளைகளுக்கும், பிள்ளைகளின் அன்பை இழந்த பெற்றோருக்காகவும், இந்த திருமணம் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் மிகவும் ஆடம்பரமாகவும், களியாட்ட நிகழ்வுகளுடன் நடத்தப்படும் திருமணங்களுக்கு மத்தியில், இந்தத் திருமணம் பலரையும் நெகிழ்சி அடையச் செய்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.