’மயிலிட்டி கலைமகள் 200ஆவது வயதில் விடுதலையாகிறாள்’

0

யாழ்ப்பாணம் மாவட்டம் வலிகாமம் வடக்கு மயிலிட்டி கலைமகள் வித்தியாலம், 28 வருடங்களின் பின்னர் இராணுவத்தினரிடம் இருந்து நாளை (06) விடுவிக்கப்படவுள்ளது.

கடந்த 1818ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலை, 200ஆவது வருடத்தில் காலடி வைக்கின்ற நிலையில், தற்போது இராணுவத்தினரின் பிடியில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது.

உள்நாட்டு யுத்தத்தம் காரணமாக, வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதி, இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு, உயர் பாதுகாப்பு வலயமாக இருந்தது. இந்தப் பகுதி காணிகள், தற்போது பகுதிப் பகுதியாக மீள மக்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மயிலிட்டி துறைமுகமானது அண்மையில் விடுவிக்கப்பட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் துறைமுக அபிவிருத்திக்காக அடிக்கால் நாட்டப்பட்டது. இதையடுத்து, நாளை (06) மிகவும் பழமை வாய்ந்த மயிலிட்டி கலை மாகள் வித்தியாலயம் விடுவிக்கப்படவுள்ளது. இதன்போது, இந்தப் பாடசாலையுடன் 3 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.