யானைகளுடன் மோதி தடம்புரண்ட ரயில் ! 5 யானைகள் பரிதாப மரணம் ! படங்கள் இணைப்பு

0

ஹபரன – பலுகஸ்வெவ பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு 5 யானைகள் உடல் சிதறி உயிரிழந்துள்ளன.கொலன்னாவையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டே குறித்த யானைகள் உயிரிழந்துள்ளன.

இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதில் முன்னதாக 3 யானைகள் உயிரிழந்ததுடன், படுகாயமடைந்திருந்த 2 யானைகளும் தற்போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் ஒரு யானையின் வயிற்றில் குட்டி இருந்ததாகவும், இந்த விபத்தில் குறித்த குட்டி யானை வெளியில் வந்து இறந்து கிடந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.இந்த விபத்தில் புகையிரதமும் தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக கொழும்பு – மட்டக்களப்பு புகையிரத சேவை மஹாவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.