நாடாளுமன்ற நிதிக் குழுவின் கூட்டம் முதன் முதலாக நாடாளுமன்றத்துக்கு வெளியே நடைபெறவுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டியிலும் நாளை திங்கட்கிழமை யாழ்ப்பாணத் திலும் நடைபெறவுள்ளன.
இவ்வாறு நாடாளுமன்ற பொதுநிதிக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நிதி விவகாரங்களைக் கையாள்வதற்கு இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற பொது நிதிக் குழு மற்றையது கோப்குழு.
நாடாளுமன்ற பொது நிதிக் குழு, இந்த ஆண்டு சமர்பிக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டத்தை ஆராயவுள்ளது.
இந்தக் குழு முதன்முறையாக நாடாளுமன்றத்துக்கு வெளியே கூடுகின்றது. கண்டியில் இன்றைய தினமும், யாழ்ப்பாணத்தில் நாளையும் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
மூன்றாவது கூட்டம் மாத்தறையில் நடைபெறும் என்றார்.
இவைகள் வெறும் சம்பிரதாய சடங்குகளாக மட்டுமே உள்ளதே அன்றி இதனால் எந்த பயனும் இல்லை என கூறும் அரசியல் அவதானிகள் இவற்றால் இதில் உள்ளவர்கள் மக்கள் பணத்தில் இன்பம் பாண்பது மட்டுமே உண்மை என்பதுடன் இடத்திற்கு இடம் வேறுபடும் உணவுகளை உண்டு ருசிக்கலாமே தவிர வேறு எந்த பயனும் ஆகாது என குறிப்பிட்டுள்ளனர்.