யாழ்ப்பாணத்தில் பொலிஸாரைத் தாக்கிவிட்டு பொலிஸ் வாகனம், ஆயுதங்களை கடத்தி சென்ற கில்லாடி கொள்ளையர்கள் ! சினிமா பாணியில் நடந்த திகில் சம்பவம்
யாழ்ப்பாணம் கொடிகாமம் பிரதேசத்தில் பொலிஸார்ரைத் தாக்கிவிட்டுப் பொலிஸாரின் வாகனத்தை இனந்தெரியாத குழுவொன்று ஆயுதங்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை(11) பிற்பகல் கடத்திச் சென்றுள்ளதாக எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மணல் கடத்தலைப் பிடிக்கச் சென்ற வேளையிலேயே பொலிஸாரைத் தாக்கிவிட்டு குறித்த வாகனம் கடத்திச் செல்லப்பட்டுள்ளது. குறித்த வாகனத்துக்குள் பொலிஸாரின் ஆயுதங்கள் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்துக் கொடிகாமம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பெருமளவு பொலிஸார் தென்மராட்சிப் பகுதி முழுவதும் குவிக்கப்பட்டுத் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடத்தப்பட்ட வாகனம் விபத்துக்குள்ளாகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகச் சற்றுமுன்னர் செய்திகள் கிடைத்துள்ளன.சினிமா பாணியில் இடம்பெற்ற இந்த சம்பவம் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது .